"அப்படியே பத்து ரூபா, எட்டு ரூபா, ஏழு ரூபா, ஏழு ரூபா, ஏழு ரூபா" என உரத்து ஒலிக்கும் வாழைப்பழ ஏல வியாபாரியின் குரல் காதில் ஒலிக்க கடந்து சென்றோம் உள் பகுதியினை நோக்கி, கடந்த வாரம் "நிஷா" ஊருக்கு வருவதாக பரவலாக பேசப்பட்டதால், சந்தை அவ்வளவாக கூடவில்லை. ஆனால் இந்த வாரம், "தங்கத்துக்கு நிகரா தக்காளி விக்கும் போது தங்கம் வாங்குறதா? இல்லே தக்காளி வாங்குறதா?" -ன்னு தெரியலையே என்று விலைவாசி உயர்வால் அங்கலாய்க்கும் திருவாளர் பொது ஜனம் இப்படி பலதரப்பட்ட மக்களுடன், மழைக்கு பின்னர் கூடிய முதல் சந்தை என்பதால் வழக்கத்தினை விட சற்று கூடுதலான மக்களுடன் நமதூர் வாரச் சந்தை பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தது. வெளிநாடு வாசகர்களுக்காக இந்த வார சந்தை நிலவரம் இங்கே. (விலை கிலோ கணக்கில்)வியாழன், 4 டிசம்பர், 2008
பங்கு சந்தை அல்ல வாரச் சந்தை...
"அப்படியே பத்து ரூபா, எட்டு ரூபா, ஏழு ரூபா, ஏழு ரூபா, ஏழு ரூபா" என உரத்து ஒலிக்கும் வாழைப்பழ ஏல வியாபாரியின் குரல் காதில் ஒலிக்க கடந்து சென்றோம் உள் பகுதியினை நோக்கி, கடந்த வாரம் "நிஷா" ஊருக்கு வருவதாக பரவலாக பேசப்பட்டதால், சந்தை அவ்வளவாக கூடவில்லை. ஆனால் இந்த வாரம், "தங்கத்துக்கு நிகரா தக்காளி விக்கும் போது தங்கம் வாங்குறதா? இல்லே தக்காளி வாங்குறதா?" -ன்னு தெரியலையே என்று விலைவாசி உயர்வால் அங்கலாய்க்கும் திருவாளர் பொது ஜனம் இப்படி பலதரப்பட்ட மக்களுடன், மழைக்கு பின்னர் கூடிய முதல் சந்தை என்பதால் வழக்கத்தினை விட சற்று கூடுதலான மக்களுடன் நமதூர் வாரச் சந்தை பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தது. வெளிநாடு வாசகர்களுக்காக இந்த வார சந்தை நிலவரம் இங்கே. (விலை கிலோ கணக்கில்)செவ்வாய், 2 டிசம்பர், 2008
வராலு மீன்
இரவு நேரத்தில் மட்டும் வெளியாகும் வராலு மீனை பிடிக்க தான். பாம்பை போன்று வளைந்து நெளிந்து போக்கு காட்டி அங்குமிங்கும் ஓடி நன்றாகவே அலைகழித்தது, பொறுத்து, பொறுத்து பார்த்த இளைஞர் ஒருவர் ஒரு கட்டத்தில் சாய்ந்தார் ரோட்டில் நெடிய மரம் போன்று, அகப்பட்டது வராலு மீன். அடுத்த வேட்டை தொடங்கியது, இந்த முறை இன்னுமொரு எமர்ஜென்ஸி லைட், கூடுதலாக சில சாக்கு, தண்ணீர் ஓட்டத்தில் தப்பாமல் இருக்க மணல் மூட்டை, சில குச்சிகளுடன் தொடங்கிய இவ்வேட்டையில் சில நிமிடங்களில் அகப்பட்டது பெரிய வராலு மீன். மீண்டும் தொடர்ந்தது வேட்டை, தூக்கம் கண்ணை தழுவவே நாம் விட்டோம் ஜூட்.
ஒரு விளக்கம்
ஆசிரியர்
ஞாயிறு, 30 நவம்பர், 2008
கவனிக்குமா மின்சார வாரியம்?
பரங்கிப்பேட்டை கிதர்சா மரைக்காயர் தெருவும், பெரிய ஆசராகாணா தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள மின் கம்பத்தினை தான் படத்தில் காண்கிறீர்கள். சிறுவர்-சிறுமியர் விளையாடும் இந்த இடத்தில் ஒயர் வெளியேயும், பெட்டிகளுக்கு பூட்டு இன்றியும் காட்சியளிப்பது ஆபத்தாகவே இருக்கின்றது. சமீபத்திய மழை வெள்ளத்தின் போது விரைவாக செயல்பட்டு மின்சாரத்தை வழங்கி அனைவர்களின் பாராட்டையும் பெற்ற பரங்கிப்பேட்டை மின்சார வாரியம் இது விஷயத்திலும் தனது கவனத்தினை செலுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. கவனிக்குமா மின்சார வாரியம்?, பொறுத்திருந்து பார்ப்போம்.....மீராப்பள்ளி குளத்திலே...
"ஹே" வென்ற உற்சாக குரல்களால் இன்று மீராப்பள்ளி குளம் களை கட்டியது. ஒரு வார கால தொடர் மழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது, மழையின் காரணமாக மீராப்பள்ளி குளம் நிரம்பி வழிவதாலும் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்கள் தொடங்க இருப்பதாலும் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகமான கூட்டத்தினை பார்க்க முடிந்தது.சனி, 29 நவம்பர், 2008
" லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்"



வெள்ளி, 28 நவம்பர், 2008
குடம், குடமாய் தண்ணீர்.....


கும்மத் பள்ளியில் சகோதரர்கள் மாலிக், ஜாக்கீர்(சுகை), ஜாக்கீர்(ஹல்வா), பாவுஜி,காலீத் ஆகியோர்களும், பரங்கிப்பேட்டை ஜமாஅத் (கூகுள் இணைய குழுமம்) சகோதரர்கள் அபுல்கலாம் ஆஜாத், செய்யது முஸ்தபா, ஹம்துன் அப்பாஸ் போன்றவர்களும் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றுவதினை கண்ட அந்த நேரத்தில் கும்மத்பள்ளி மீட்பு குழுவினர்களில் ஒருவரையோ அல்லது அவர்கள் சார்பாக வேறு யாரையுமோ அங்கே நம்மால் காண முடியாதது சற்று வருத்தத்தினை ஏற்படுத்தியது. இது குறித்து ஒரு சகோதரரிடம் நமது செய்தியாளர் பேசியபோது, " நாங்க அங்கே வந்தால் தகராறு ஏற்படும் அதனால தான் வரலே" என்ற பதிலுக்கு நமது செய்தியாளர் "சரி நீங்க வரல, உங்க மூலமா யாரையாவது அனுப்பி இருக்கலாமே" என்று வினவியதற்கு அவரிடமிருந்து நமக்கு மவுனமே பதிலாக கிடைத்தது. எது எப்படியோ அல்லாஹ்-வின் பள்ளியில் வியாழன் அன்று இஷா தொழுகை நடைப்பெற்றது
திருமணத் தகவல்
இறப்புத் தகவல்
இறப்புத் தகவல்
கடும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த பதிவு தாமதமாக இன்று பதிவு செய்யப்படுகின்றது
செவ்வாய், 25 நவம்பர், 2008
தொடரும் மழை
ஞாயிறு, 23 நவம்பர், 2008
மழைக்கால மாலைப்பொழுது....

வெள்ளி, 21 நவம்பர், 2008
இறப்புத் தகவல்
மஹ்மூதியா மினி ஷாதி மஹால்
வியாழன், 20 நவம்பர், 2008
இறப்புத் தகவல்
இறப்புத் தகவல்
சனி, 8 நவம்பர், 2008
கண்டன ஆர்ப்பாட்டம்











