செவ்வாய், 25 நவம்பர், 2008

தொடரும் மழை

ஐப்பசி மாச அடை மழை-ன்னு சொல்வாங்க, இப்ப பாத்திங்களா, நல்ல பனி பெய்யுது , ஆமாங்க சுனாமிக்கு பிறகு எல்லாமே மாறிடிடுச்சி என்ற நம்மவர்களின் சலிப்புகளை மெளனமாக செவிமடுத்த மழை தொடங்கியது தனது பணியினை. கடந்த இரண்டு நாளுக்கு முன் தொடங்கிய மழை இன்னும் விடவில்லை. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழை நிலவரப்படி மாநிலத்திலேயே அதிக அளவாக பரங்கிப்பேட்டையில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இரட்டை கிணறு தெருவில் பலத்த மழையின் காரணமாக விழுந்த மரம் இன்று காலை அகற்றப்பட்டது. மழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அளித்துள்ளது