சனி, 29 நவம்பர், 2008

" லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்"

அணிவகுத்த வாகனங்கள், உற்சாகத்தில் மக்கள், இப்படி தான் காணப்பட்டது, மீராப்பள்ளி தெருவும், மீராப்பள்ளியும். பரங்கிப்பேட்டை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 25 நபர்கள் ஒரே நாளில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதால் தான் இத்தனை மகிழ்ச்சி. ஹஜ் பயணிகள் 4 மணிக்கு 28 வாகனங்களில் மீராப்பள்ளியிலிருந்து புறப்பட்டனர். இவர்களின் ஹஜ் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்-ஜாக இருக்கவும், இவர்களின் ஹஜ் பயணம் சிறப்பாகஅமையவும் "பரங்கிப்பேட்டை செய்தி மடல்" சார்பாக எல்லாம் வல்ல அல்லாஹ் இடம் பிரார்த்திக்கின்றோம். ஹஜ் பயணிகளை வழியனுப்ப சில மாற்று மத சகோதரர்களும் வருகை புரிந்திருந்தனர்.
" லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்"