ஞாயிறு, 30 நவம்பர், 2008

கவனிக்குமா மின்சார வாரியம்?

பரங்கிப்பேட்டை கிதர்சா மரைக்காயர் தெருவும், பெரிய ஆசராகாணா தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள மின் கம்பத்தினை தான் படத்தில் காண்கிறீர்கள். சிறுவர்-சிறுமியர் விளையாடும் இந்த இடத்தில் ஒயர் வெளியேயும், பெட்டிகளுக்கு பூட்டு இன்றியும் காட்சியளிப்பது ஆபத்தாகவே இருக்கின்றது. சமீபத்திய மழை வெள்ளத்தின் போது விரைவாக செயல்பட்டு மின்சாரத்தை வழங்கி அனைவர்களின் பாராட்டையும் பெற்ற பரங்கிப்பேட்டை மின்சார வாரியம் இது விஷயத்திலும் தனது கவனத்தினை செலுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. கவனிக்குமா மின்சார வாரியம்?, பொறுத்திருந்து பார்ப்போம்.....

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆபத்தான விசயத்தை பொது மக்களின் கவணத்திருக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி
பந்தர் அலி ஆபிதீன்
பரங்கிப் பேட்டை

பெயரில்லா சொன்னது…

THANK YOU FOR YOU ARE ALSO THE ONE WHO BRINGS SUCH CRITICAL MATTERS IN THE PEOPLES VIEW

பெயரில்லா சொன்னது…

சமீபத்திய மழையின் போது சிறப்பாக செயலாற்றி விரைவாக மின்சாரம் வழங்கிய, மின்சார இலகாவினர் பாராட்டுக்குரியவர்கள்

இந்த விஷயத்திலும் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்பது என் நம்பிக்கை.

M.Gee.ஃபக்ருத்தீன் சொன்னது…

பரங்கிப்பேட்டையைப் பற்றிய இந்த புதிய வலைப்பூ செய்திகளில் மட்டுமின்றி புகைப்பட பார்வையிலும் புதுமையை தந்துள்ளது. வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

மின்சார வாரியம் கவணத்தில் கொள்ள வேண்டிய செய்தி இது.
இச்செய்தியை வெளியிட்ட பரங்கிப்பேட்டை செய்தி மடலுக்கு மிக்க நன்றி.

பெயரில்லா சொன்னது…

சரியாக சொன்னிர்க்ள் நன்பர் அபு நூஹா அவர்களே.
இவ்விசியத்தில் மின்சார வாரியம் கண்டிப்பாக தனது கவனத்தினை செலுத்துவார்கள் என நான் நம்புகிறேன் செலுத்துவார்கலா பொறுத்திருந்து பார்ப்போம்.....

பெயரில்லா சொன்னது…

Pepsi bought limca & thumsup! True?

பெயரில்லா சொன்னது…

நடத்துங்க.. நடத்துங்க..

அட வலைப்பூவ நல்லா நடத்துங்க..

ஆமா, யாரோ ஆளுங்கட்சிக்கு மாறப்போறதா கேள்விப்பட்டேனே.. நெசமா?

இப்னு இல்யாஸ் சொன்னது…

இங்கு பதிந்ததோடு நில்லாமல் இச்செய்தியை மின் வாரிய கவனத்திற்கு முறையாக கொண்டு சென்றால் கூடுதல் பலன் கிடைக்குமே!