செவ்வாய், 2 டிசம்பர், 2008

வராலு மீன்

மாப்ளே... உடாதே.....நல்லா புடி..... வழுக்குதுடா.... இப்படியான உற்சாக குரல்கள் ஒலிக்க கையில் எமர்ஜென்ஸி லைட்டுடன் கூடியிருந்த இளைஞர்கள் கூட்டத்தால் சின்னக்கடை பகுதி நேற்றிரவு பத்து மணிக்கு களை கட்டியிருந்தது, எல்லாம் மீராப்பள்ளி குளத்திலிருந்து வெளிவரும் தண்ணீரில்
இரவு நேரத்தில் மட்டும் வெளியாகும் வராலு மீனை பிடிக்க தான். பாம்பை போன்று வளைந்து நெளிந்து போக்கு காட்டி அங்குமிங்கும் ஓடி நன்றாகவே அலைகழித்தது, பொறுத்து, பொறுத்து பார்த்த இளைஞர் ஒருவர் ஒரு கட்டத்தில் சாய்ந்தார் ரோட்டில் நெடிய மரம் போன்று, அகப்பட்டது வராலு மீன். அடுத்த வேட்டை தொடங்கியது, இந்த முறை இன்னுமொரு எமர்ஜென்ஸி லைட், கூடுதலாக சில சாக்கு, தண்ணீர் ஓட்டத்தில் தப்பாமல் இருக்க மணல் மூட்டை, சில குச்சிகளுடன் தொடங்கிய இவ்வேட்டையில் சில நிமிடங்களில் அகப்பட்டது பெரிய வராலு மீன். மீண்டும் தொடர்ந்தது வேட்டை, தூக்கம் கண்ணை தழுவவே நாம் விட்டோம் ஜூட்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வராலு மீன் செய்தி படித்தவுடன் நாக்கில் எச்சில் ஊறியது .ராத்திரி ரவூண்ட் அப் நன்றாக இருந்தது

பெயரில்லா சொன்னது…

nanbanudan, varaalu meenaiyum kandathaal konjam relax.

syed

பெயரில்லா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

பெயரில்லா சொன்னது…

தெளிந்த நீரினடியில் தன்னுலகத்தில் நீந்துகிற பளிங்கு மீனின் சுகம் உங்கள் எழுத்துநடையில். தொடருங்கள்.


(ஒரு வேண்டுகோள்: பின்னூட்ட மட்டுறுத்தலை இற்றைப்படுத்துக! நன்றி)