வியாழன், 4 டிசம்பர், 2008

பங்கு சந்தை அல்ல வாரச் சந்தை...

"அப்படியே பத்து ரூபா, எட்டு ரூபா, ஏழு ரூபா, ஏழு ரூபா, ஏழு ரூபா" என உரத்து ஒலிக்கும் வாழைப்பழ ஏல வியாபாரியின் குரல் காதில் ஒலிக்க கடந்து சென்றோம் உள் பகுதியினை நோக்கி, கடந்த வாரம் "நிஷா" ஊருக்கு வருவதாக பரவலாக பேசப்பட்டதால், சந்தை அவ்வளவாக கூடவில்லை. ஆனால் இந்த வாரம், "தங்கத்துக்கு நிகரா தக்காளி விக்கும் போது தங்கம் வாங்குறதா? இல்லே தக்காளி வாங்குறதா?" -ன்னு தெரியலையே என்று விலைவாசி உயர்வால் அங்கலாய்க்கும் திருவாளர் பொது ஜனம் இப்படி பலதரப்பட்ட மக்களுடன், மழைக்கு பின்னர் கூடிய முதல் சந்தை என்பதால் வழக்கத்தினை விட சற்று கூடுதலான மக்களுடன் நமதூர் வாரச் சந்தை பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தது. வெளிநாடு வாசகர்களுக்காக இந்த வார சந்தை நிலவரம் இங்கே. (விலை கிலோ கணக்கில்)
இஞ்சி ரூ.40
முள்ளங்கி ரூ.20
பச்சை மிளகாய் ரூ.15
கருணை கிழங்கு ரூ.20
கேரட் ரூ.28
கத்தரிக்காய் ரூ.30
பீட்ரூட் ரூ.20
உருளை கிழங்கு ரூ.20
முட்டை கோஸ் ரூ.20
தக்காளி ரு.33
பல்லாரி வெங்காயம் ரூ.15
சவ்சவ் ரூ.15
பூண்டு ரூ.20
புளி ரூ.35
வெண்டைக்காய் ரூ.32
முள்ளங்கி ரூ.20
பீன்ஸ் ரூ.28
மரவள்ளி கிழங்கு ரூ.6

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வாரச்சந்தை நிலவரம் வித்தியாசமாக இருந்தது வாழைப்பழ வியாபாரியின் ஏல குரல் சந்தையை நம் கண் முன் கொண்டுவந்தது விலைப்பட்டியலில் "சின்ன வெங்காயத்தை" மறந்தது ஏனோ..?
(ஆசிரியரே உங்களூக்கு "சாம்பார்" பிடிக்காதோ?)

Vajhi Bhai சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.
அட அட அட !!!!!!!!!!!!!

வியாழக்கிழமை சந்தைக்கு சென்று வந்தது போல் இருக்கிறது.

அப்பாஸ், நீங்க ஊருக்கு சென்று, அனைவரும் ஊரில் வந்தால் என்ன அனுபவம் கிடைக்குமோ , அதை இங்கிருந்தே கிடைக்க பெற்றோம்.

வஸ்ஸலாம்
வஜ்ஹுதீன்.

ஹம்துன்அஷ்ரப் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

ஏங்க இன்னையோட 19 நாள் ஆயிடுச்சி நீங்க அப்டெட் பன்னி.
அப்டெட் பன்னுவீங்களா? மாட்டுங்கிளா/