பரங்கிப்பேட்டை கிதர்சா மரைக்காயர் தெருவும், பெரிய ஆசராகாணா தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள மின் கம்பத்தினை தான் படத்தில் காண்கிறீர்கள். சிறுவர்-சிறுமியர் விளையாடும் இந்த இடத்தில் ஒயர் வெளியேயும், பெட்டிகளுக்கு பூட்டு இன்றியும் காட்சியளிப்பது ஆபத்தாகவே இருக்கின்றது. சமீபத்திய மழை வெள்ளத்தின் போது விரைவாக செயல்பட்டு மின்சாரத்தை வழங்கி அனைவர்களின் பாராட்டையும் பெற்ற பரங்கிப்பேட்டை மின்சார வாரியம் இது விஷயத்திலும் தனது கவனத்தினை செலுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. கவனிக்குமா மின்சார வாரியம்?, பொறுத்திருந்து பார்ப்போம்.....ஞாயிறு, 30 நவம்பர், 2008
கவனிக்குமா மின்சார வாரியம்?
பரங்கிப்பேட்டை கிதர்சா மரைக்காயர் தெருவும், பெரிய ஆசராகாணா தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள மின் கம்பத்தினை தான் படத்தில் காண்கிறீர்கள். சிறுவர்-சிறுமியர் விளையாடும் இந்த இடத்தில் ஒயர் வெளியேயும், பெட்டிகளுக்கு பூட்டு இன்றியும் காட்சியளிப்பது ஆபத்தாகவே இருக்கின்றது. சமீபத்திய மழை வெள்ளத்தின் போது விரைவாக செயல்பட்டு மின்சாரத்தை வழங்கி அனைவர்களின் பாராட்டையும் பெற்ற பரங்கிப்பேட்டை மின்சார வாரியம் இது விஷயத்திலும் தனது கவனத்தினை செலுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. கவனிக்குமா மின்சார வாரியம்?, பொறுத்திருந்து பார்ப்போம்.....மீராப்பள்ளி குளத்திலே...
"ஹே" வென்ற உற்சாக குரல்களால் இன்று மீராப்பள்ளி குளம் களை கட்டியது. ஒரு வார கால தொடர் மழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது, மழையின் காரணமாக மீராப்பள்ளி குளம் நிரம்பி வழிவதாலும் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்கள் தொடங்க இருப்பதாலும் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகமான கூட்டத்தினை பார்க்க முடிந்தது.சனி, 29 நவம்பர், 2008
" லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்"



வெள்ளி, 28 நவம்பர், 2008
குடம், குடமாய் தண்ணீர்.....


கும்மத் பள்ளியில் சகோதரர்கள் மாலிக், ஜாக்கீர்(சுகை), ஜாக்கீர்(ஹல்வா), பாவுஜி,காலீத் ஆகியோர்களும், பரங்கிப்பேட்டை ஜமாஅத் (கூகுள் இணைய குழுமம்) சகோதரர்கள் அபுல்கலாம் ஆஜாத், செய்யது முஸ்தபா, ஹம்துன் அப்பாஸ் போன்றவர்களும் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றுவதினை கண்ட அந்த நேரத்தில் கும்மத்பள்ளி மீட்பு குழுவினர்களில் ஒருவரையோ அல்லது அவர்கள் சார்பாக வேறு யாரையுமோ அங்கே நம்மால் காண முடியாதது சற்று வருத்தத்தினை ஏற்படுத்தியது. இது குறித்து ஒரு சகோதரரிடம் நமது செய்தியாளர் பேசியபோது, " நாங்க அங்கே வந்தால் தகராறு ஏற்படும் அதனால தான் வரலே" என்ற பதிலுக்கு நமது செய்தியாளர் "சரி நீங்க வரல, உங்க மூலமா யாரையாவது அனுப்பி இருக்கலாமே" என்று வினவியதற்கு அவரிடமிருந்து நமக்கு மவுனமே பதிலாக கிடைத்தது. எது எப்படியோ அல்லாஹ்-வின் பள்ளியில் வியாழன் அன்று இஷா தொழுகை நடைப்பெற்றது
திருமணத் தகவல்
இறப்புத் தகவல்
இறப்புத் தகவல்
கடும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த பதிவு தாமதமாக இன்று பதிவு செய்யப்படுகின்றது



